Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டை வஞ்சித்த பாசிச பாஜக அரசை கண்டித்து சென்னை கிழக்கு, வடக்கு, வடகிழக்கு மாவட்ட திமுக நாளை ஆர்ப்பாட்டம்

சென்னை: தமிழ்நாட்டை வஞ்சித்த பாசிச பாஜக அரசை கண்டித்து சென்னை கிழக்கு, வடக்கு, வடகிழக்கு மாவட்ட திமுக சார்பில் நாளை சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் நடக்கும் ஆர்ப்பாட்டத்துக்கு தயாநிதி மாறன் எம்பி தலைமை வகிக்கிறார். சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கை: 2024-2025ம் ஆண்டின் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை ஒட்டுமொத்த இந்திய திருநாட்டிற்கான நிதிநிலை அறிக்கையாக இல்லாமல் மோடி தலைமையிலான மைனாரிட்டி ஒன்றிய அரசு தனது ஆட்சியை காப்பாற்றி கொள்வதற்காக சில மாநிலங்களுக்கு மட்டும் நிதிகளை தாராளமாக அள்ளிக்கொடுத்தும் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகித்து வரும் தமிழ்நாடு போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மீது வன்மத்தை கக்கும் வகையில் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது.

தமிழ்நாடு சந்தித்த 2 தொடர் இயற்கை பேரிடர் இழப்புகள், மெட்ரோ ரயில் திட்டம் ஆகியவற்றிற்கு நிதி அவசியம் வழங்கிட வேண்டுமென்று தமிழ்நாடு முதல்வர் முன்வைத்த கோரிக்கைகளை முற்றிலுமாக புறக்கணித்து சில மாநி லங்களுக்கு மட்டும் நிதிகளை வாரி வழங்கியுள்ளது. ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் மாற்றான்தாய் மனப்பான்மையோடு தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் பாசிச பாஜக அரசை கண்டித்து முதல்வர் ஆணையேற்று நாளை (27ம்தேதி) காலை 9 மணி அளவில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.டி. சேகர், வடகிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் ஆகியோர் இணைந்து நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தலைமை வகிக்கிறார்.

எனவே, 3 மாவட்டங்களுக்கு உட்பட்ட எம்எல்ஏக்கள் ஜோசப் சாமுவேல், ப.தாயகம் கவி, அ.வெற்றியழகன், இ.பரந்தாமன், ஜெ.ஜெ.எபினேசர், ஐட்ரீம் ஆர்.மூர்த்தி, கே.பி.சங்கர் மற்றும் மாநில நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் எம்எல்ஏக்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், தொகுதி பொறுப்பாளர்கள், பகுதி கழக செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மண்டல குழு தலை வர்கள், வட்ட செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பகுதி, வட்ட நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் செயல் வீரர்கள், முன்னோடிகள் பெருந்திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.