Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

இது தவெக அரசு இல்ல.. "டேக் டைவர்ஷன் அரசு" - காவிரி, மேகதாது, நீட் விவகாரங்களில் எல்லாம் சைலன்ட்..

சென்னை: தவெக அரசு எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதற்கு உரிய தீர்வு காணாமல் திசை திருப்பும் வேலையை மட்டுமே பார்க்கும் "டேக் டைவர்ஷன்" அரசாகவே செயல்பட்டு கொண்டிருக்கிறது என்று திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறி உள்ளார்.

சமீபத்தில் பெண் அமைச்சர் பெரியதாக ஆடியோ ஒன்று வைரலானது, அதில் அவர் உள்ளாடையை கழற்றி உட்கார வைத்து உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறார். அவர் மீது இதுவரை நடவடிக்கை இல்லை, போதையை ஒழிக்க போவதாக சொல்கிறார்கள்.ஆனால் போதை பவுடருக்கு எந்த அமைச்சர் பிரபலமானார் என்று நம் அனைவருக்குமே தெரியும். அந்த அமைச்சர் மீதும் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தவெக-வை பொறுத்தவரை நீட் விவகாரத்தில் வாயை திறக்காது, காவிரி விவகாரத்தில் வாயை திறக்காது. ஆனால் ஏதோ ஒருவிதத்தில் பொய் வழக்கு போட்டு எதிர்க்கட்சி தலைவரை கைது செய்துள்ளனர். நேற்று போராட்டத்தில் பேசிய போது காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தில் வாயே திறக்காத தவெக அரசை, பட்ஜெட் கூட்டத்தொடரில் சும்மா விடப்போவதில்லை என்று பேசியிருந்தார். அதற்கு பயந்து கொண்டு, அவருடைய நியாயமான கேள்விகளுக்கெல்லாம் எப்படி பதில் சொல்ல போகிறோம் என்று பயந்தே இந்த கைது நடவடிக்கையை ஆளும் அரசு முன்னெடுத்து இருக்கிறது என்று அன்பில் மகேஷ் சாடியுள்ளார்.