Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோரை மீட்கும் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன்.. சர்வேதேச விண்வெளி மையத்தை சென்றடைந்தது..!!

நியூயார்க்: சுனிதா வில்லியம்ஸ், வில்மோரை அழைத்து வர புறப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது. பூமியில் இருந்து சுமார் 420 கிமீ உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அடிக்கவி விண்வெளி ஆய்வாளர்கள் சென்று ஆய்வு செய்து விட்டு திரும்புவது வழக்கம். இப்பணிகளை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா கவனித்து வருகிறது. இவ்வாறு விண்வெளிக்கு வீரர்களை அழைத்துச் சென்று பத்திரமாக திரும்ப அழைத்து வரும் பணியில் தனியாரை ஈடுபடுத்த நாசா முடிவு செய்தது. அதன்படி, முன்னணி தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கும் பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான போயிங்கிற்கும் அனுமதி வழங்கப்பட்டது. இதில் ஸ்பேஸ்எக்ஸ் தனது சோதனைகளை முடித்து, வீரர்களை விண்வெளிக்கு வெற்றிகரமாக வீரர்களை அழைத்துச் சென்று வருகிறது.

ஆனால் போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலம் பலகட்ட சிக்கல்களை சந்தித்தது. சோதனையிலும் நிறைய தடுமாற்றங்கள் வந்த நிலையில் ஒருவழியாக கடந்த ஜூன் 7ம் தேதி இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகிய 2 வீரர்களுடன் ஸ்டார்லைனர் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடைந்தது. அடுத்த 8 நாளில் சுனிதா உட்பட 2 வீரர்களும் ஸ்டார்லைனர் மூலம் பூமிக்கு திரும்ப வேண்டிய நிலையில், விண்கலத்தில் ஹீலியம் வாயு கசிவு போன்ற தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டது. இதனால் இருவரும் மாத கணக்கில் விண்வெளியில் சிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார்.

இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை பூமிக்கு அழைத்து வரும் பொறுப்பை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வசம் நாசா ஒப்படைத்தது. அதன்படி நேற்று க்ரூ டிராகன் 9 விண்கலம் ஏவப்பட்டது. அது நேற்று இரவு வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்று சேர்ந்திருக்கிறது. இதில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவை சேர்ந்த விண்வெளி வீரர்கள் இருக்கின்றனர். இவர்கள், சுனிதா வில்லியம்ஸ் உடன் இணைந்து விண்வெளியில் ஆய்வை மேற்கொள்வார்கள். இந்த விண்கலத்தில் மொத்தம் 4 பேர் வரை பயணிக்க முடியும். ஆனால் 2 பேரை மட்டுமே நாசா அனுப்பியுள்ளது. மீதமுள்ள இரண்டு சீட்டுகள் சுனிதாவுக்கும், வில்மோருக்கும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த விண்கலம் மூலம் வரும் பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புகின்றனர்.