தெஹ்ரான்: ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரான், அமெரிக்காவுக்கு 7 நிபந்தனைகளை விதித்துள்ளது. தாங்கள் சொல்லும் 7 நிபந்தனைகளையும் ஏற்றால் ஹோர்முஸ் நீரிணையை முழுவதுமாக திறக்க தயாராக இருப்பதாகவும் ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் தகவல்களின்படி, ஈரான் விதித்துள்ள முக்கிய நிபந்தனைகள் பின்வருமாறு:
* போர் நிறுத்தம்: மத்திய கிழக்கு நாடுகளில், குறிப்பாக லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் உள்ளிட்ட அனைத்து முனைகளிலும் போர் முடிவுக்கு வர வேண்டும்.
* அமெரிக்கத் தடை நீக்கம்: ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்காவின் கடற்படை முற்றுகை மற்றும் தடைகள் முழுமையாக விலக்கப்பட வேண்டும்.
* எண்ணெய் தடை நீக்கம்: ஈரானின் எண்ணெய் துறை மீதான தடைகளை நீக்கி, எண்ணெய் வர்த்தகத்திற்கான விலக்குகளை மீண்டும் வழங்க வேண்டும்.
* புதிய வழித்தடம்: ஈரானுக்கும் ஓமனுக்கும் இடையே ஒப்புக்கொள்ளப்பட்ட புதிய கடல்வழிப் போக்குவரத்துப் பாதையை அமெரிக்கா ஏற்க வேண்டும்.
* படை குறைப்பு: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.
* முடக்கப்பட்ட சொத்து: வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள சொத்துக்களை விடுவிக்க வேண்டும்.
* விவாதம்: அணுசக்தி திட்டம் குறித்த விவாதங்களை போர் முடிவடைந்த பின்னரும், நீரிணை திறக்கப்பட்டு முற்றுகை வாபஸ் பெறப்பட்ட பின் தான் நடத்த வேண்டும்.
மேற்கண்ட இந்த 7 நிபந்தனைகளுக்கு ஒப்புதல் அளித்தால், அடுத்த 2 நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும் என ஈரான் அறிவித்துள்ளது.


