சென்னை: சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். நாங்குநேரி தொகுதி வேலவன் குடியிருப்பில் விளையாட்டு மைதானத்துக்கு உபகரணங்கள் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
சிவகங்கை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் விளையாட்டு மைதான கட்டமைப்பை மேம்படுத்த சிறப்பு திட்டங்கள் இருக்கின்றன என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதில் அளித்தார். இதற்கான சிறப்பு திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார்.
கலாச்சாரம் சார்ந்த விளையாட்டுகளுக்கு தனி விளையாட்டு கோப்பை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார். நன்னிலம் தொகுதியில் நவீன விளையாட்டு அரங்கம் அமைத்து தர உறுப்பினர் காமராஜ் கோரிக்கை விடுத்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரே மாதிரியான விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டார். எடப்பாடியில் மினி ஸ்டேடியம் கட்டுமான பணியை முடிக்க வேண்டுமென்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஆதவ், மினி ஸ்டேடியத்தை மறுகட்டமைக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.


