Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை ஒட்டி வரும் 4ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு

சென்னை: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை ஒட்டி வரும் 4ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கபப்ட்டுள்ளது. இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஜூலை 7ம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் (கும்பாபிஷேகம்) குடமுழுக்கு நடைபெறுவதை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் ஜூலை 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை கீழ்கண்ட இடங்களிலிருந்து திருச்செந்தூருக்கும் மற்றும் ஜூலை 7ம் தேதி திருச்செந்தூரிலிருந்து பக்தர்கள் தங்களது ஊர்களுக்கு திரும்பி வருவதற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

சென்னை, திருச்சி, புதுச்சேரி. கும்பகோணம், சேலம், பெங்களூரு, தஞ்சாவூர், கோயம்புத்தூர், ஈரோடு, நாகப்ட்டினம் ஆகிய இடங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பக்தர்கள் கடைசி நேரத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.