Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

செனட் சபையை இழந்தது குடியரசு கட்சி.!! அமெரிக்க அதிபருக்கு பெரும் பின்னடைவு

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஜனநாயக கட்சியானது செனட் சபையை கைப்பற்றி உள்ளது. ஜனநாயக கட்சி 52 இடங்களில் வெற்றி பெற்று செனட் சபையை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் குடியரசு கட்சி செனட் சபையை இழந்துள்ளது.

ஓகியோ மாகாண ஆளுநர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட விவேக் ராமசாமி தோல்வி அடைந்துள்ளார். அதே போல பிரதிநிதிகள் சபையையும் டிரம்ப்பின் குடியரசு கட்சி இழக்கும் நிலையில் தான் உள்ளது. பிரதிநிதிகள் சபை தேர்தலில் டிரம்ப் கட்சி 123 இடங்களிலும் ஜனநாயக கட்சி 205 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

இந்த தேர்தல் முடிவுகள் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபரான 2 ஆண்டுகளில் அவருக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பல இடங்களை டிரம்ப் கட்சி இழந்தது. புளோரிடா மாகாண ஆளுநராக குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பைரன் டொனால்டு வெற்றி பெற்றார். ஜார்ஜியா கவர்னராக ஜனநாயக கட்சியின் லான்ஸ் போட்டம் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 2 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த தேர்தல் மூலம் நாடாளுமன்றத்தில் ஜனநாயக கட்சியின் கை ஓங்கியதால், முக்கிய முடிவுகளை எடுப்பதில் அதிபர் டிரம்ப் எடுப்பதில் பெரும் பின்னடைவு ஏற்படும்.