Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பள்ளிப்படிப்பை கைவிட்ட மாணவனை நேரில் சந்தித்துப் பேசிய விருதுநகர் ஆட்சியருக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: பள்ளிப்படிப்பை கைவிட்ட மாணவனை நேரில் சந்தித்துப் பேசிய விருதுநகர் ஆட்சியருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். '4 ஆண்டுகளில் கல்வியில் இடைநிற்றல் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளோம். மாணவர்கள் இடைநிற்றலை தடுக்கும் பணியில் ஆசிரியர்கள், பொதுமக்களும் இணைய வேண்டும். உங்கள் பகுதிகளில் பள்ளி செல்லாத மாணவர்கள் இருந்தால் கண்டறியுங்கள்' என முதல்வர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் முதல்வர் தெரிவித்துள்ளதாவது; "விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு வாழ்த்துகள்.

கடந்த 4 ஆண்டுகளில் ‘இடைநிற்றலே இல்லாத’ மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளோம்! இந்த நிலை தொடர அர்ப்பணிப்போடு பணியாற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் ஆகியோருக்கும் வாழ்த்துகள்!

ஆசிரியர்களுக்கும், பொதுமக்களுக்கும் என் வேண்டுகோள்: இந்த இயக்கத்தில் நீங்களும் இணைய வேண்டும்! உங்கள் பகுதியில், பள்ளி செல்லாத மாணவர்கள் இருந்தால் கண்டறியுங்கள். ‘கல்வியை மிஞ்சிய செல்வம் எதுவும் இல்லை’ என அவர்களுக்கு உணர்த்துங்கள்.

காலை உணவுத் திட்டம், ஸ்மார்ட் வகுப்பறைகள், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் என ஒவ்வொரு நிலையிலும் அவர்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்ல அரசின் திட்டங்கள் இருப்பதை எடுத்துக் கூறுங்கள்.

‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்பதை உறுதிசெய்வோம்" என தெரிவித்துள்ளார்.