Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பள்ளி திறக்கும் முதல் நாளில் புத்தகம் தர நடவடிக்கை: தமிழ்நாடு பாடநூல் கழகம்

சென்னை: கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு புத்தகம் தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது. அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பப்பட்டு வருகிறது. ஜூன் 2ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும்.

2025-26ம் கல்வியாண்டிற்கு தேவையான 99% புத்தகங்கள் அச்சிடப்பட்டு தயார்நிலையில் உள்ளன. 4.16 கோடி புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்க தயார் நிலையில் உள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முன்னதாகவே பாடப்புத்தகங்கள் முழுமையாக வழங்கப்படும் என தமிழ்நாடு பாடநூல் கழகம் அறிவித்துள்ளது.

தற்போது அனைத்து மாவட்டக் கல்வி அலுவலக விநியோக மையங்களுக்கும் பாடநூல் கழகம் தேவையான உபகரணங்களை அனுப்பியுள்ளது. மாவட்ட விநியோக மையங்களில் பெறப்பட்டுள்ள பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் இதர கல்வி உபகரணங்கள் அனைத்தும் பள்ளி திறப்பதற்கு முன்பாகவே பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் முதல் நாளில் மாணவர்களுக்கு பாடநூல்கள், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். இதில் எவ்வித காலதாமதமும் ஏற்படாதவாறு உரிய நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் தமிழ்நாடு பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது.