Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சான் பிரான்சிஸ்கோ - மும்பை விமானத்தில் எஞ்சின் பழுது: பயணிகளை பத்திரமாக தரையிறங்கிய விமானி

கொல்கத்தா: சான் பிரான்சிஸ்கோவில் இருந்து கொல்கத்தா வழியாக மும்பை வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தின் எஞ்சினில் பழுது ஏற்பட்டது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து, கொல்கத்தா வழியாக மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று நேற்று புறப்பட்டது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த நிலையில், விமானத்தின் 2 எஞ்சின்களில் ஒன்றில் பழுது ஏற்பட்டுள்ளது. எஞ்சினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி உணர்ந்தார்.

இதை தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறு குறித்து அதிகாரிகளுக்கு விமானி தகவல் தெரிவித்தார். இருப்பினும் பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விமானி விமானத்தை சாதுர்யமாக இயக்கி திட்டமிட்ட நேரத்தில் கொல்கத்தா விமான நிலையத்தை அடைந்தது. திட்டமிட்ட நேரமான நள்ளிரவு 12.45க்கு கொல்கத்தா விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறக்கப்பட்டது.

எஞ்சின் பழுதால் சுமார் 5 மணி நேர காத்திருப்புக்கு பிறகு பயணிகள் அதிகாலை 5.20 மணி அளவில் பத்திரமாக விமானத்தில் இருந்து இறங்குமாறு விமானி அறிவுறுத்தினார். விமானிகள் அனைவரும் கீழே இறக்கிவிடப்பட்டதை அடுத்து நிபுணர்கள் விமானத்தை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் மும்பைக்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் கொல்கத்தாவில் நிறுத்திவைக்கப்பட்டது. இந்த சம்பவம் பயணிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.