Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

2025ம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது பெறத் தேர்வாகியிருக்கும் எழுத்தாளர்கள் விஷ்ணுபுரம் சரவணன், லட்சுமிஹருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: 2025ம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது பெறத் தேர்வாகியிருக்கும் எழுத்தாளர்கள் விஷ்ணுபுரம் சரவணன், லட்சுமிஹருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வரின் சமுக வலைதளப்பதிவில்:

சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் குழந்தைகளுக்கு வலியுறுத்தும் ‘ஒற்றைச் சிறகு ஓவியா’ நூலுக்காக சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார் பெறத் தேர்வாகியிருக்கும் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு எனது மனம்நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஊஞ்சல், தேன்சிட்டு, கனவு ஆசிரியர் என தமிழ்நாடு பள்ளிகல்வித்துறையின் முன்னெடுப்புகளிலும் திறம்படப் பங்காற்றி வரும் விஷ்ணுபுரம் சரவணன் இந்த விருதுக்குத் தேர்வாகி இருப்பது கூடுதல் பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது.

அதேபோல, ஆழமான தம் எழுத்துகளுக்கான அங்கீகாரமாகக் ‘கூத்தொன்று கூடிற்று & பிற கதைகள்” சிறுகதைத் தொகுப்புக்காக யுவ புரஸ்கார் விருது பெறத் தேர்வாகி இருக்கும் லட்சுமிஹருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விருது பெறும் இரு இளம் படைப்பாளிகளும் மென்மேலும் தமிழைச் செழுமைப்படுத்தும் ஆக்கங்களைத் தொடர்ந்து அளிக்க வேண்டும் என வாசிப்பினைப் பெரும் இயக்கமாக முன்னெடுத்து வரும் நமது திராவிட மாடல் அரசின் சார்பில் வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.