Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

டெலிகிராம் நிறுவனருக்கு ரஷ்யா சர்வதேச பிடிவாரண்ட்.!! பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியதாக குற்றச்சாட்டு

மாஸ்கோ: டெலிகிராம் செயலியின் நிறுவனர் பாவெல் துரோவ் (Pavel Durov) பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியதாக குற்றம்சாட்டி, அவரை சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து ரஷ்யா பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

ரஷ்யாவின் முதன்மை உள்நாட்டுப் பாதுகாப்பு முகமையான Federal Security Serviceபயங்கரவாதத்திற்கு உதவியதாக பாவெல் மாது குற்றம்சாட்டி, அவரை சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து உள்ளது. உக்ரைன் உளவு அமைப்புகள், பயங்கரவாத மற்றும் தீவிரவாத அமைப்புகள் உள்ளிட்டவை ரஷ்யாவிற்குள் தாக்குதல்கள், நாச வேலைகள் செய்ய மற்றும் சைபர் மோசடிகளை ஒருங்கிணைக்க டெலிகிராம் தளத்தை (டெலிகிராம் சேனல்களை) தீவிரமாகப் பயன்படுத்துவதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.

டெலிகிராம் மூலமாக நடைபெறும் சதிச் செயல்களையும், தீவிரவாத ஒருங்கிணைப்புகளையும் தடுக்கத் தவறியதாக பாவெல் துரோவ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சட்டவிரோத செயல்களுக்குப் பயன்படுத்தப்படும் ஏராளமான டெலிகிராம் சேனல்கள், சாட்கள் மற்றும் பாட்களை (Bots) நீக்க டெலிகிராம் நிர்வாகம் மறுத்துவிட்டதாகவும் ரஷ்யாவின் FSB குற்றம்சாட்டி உள்ளது.

ரஷ்யாவில் பிறந்தவரான பாவெல் துரோவ், தற்போது பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரக குடியுரிமைகளை பெற்றுள்ளார். எனினும் இவர் மேற்கண்ட நாடுகளில் இருக்கும்பட்சத்தில் அவரை ரஷ்யாவிற்கு நாடு கடத்துவது கடினம் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.