சென்னை: குடியரசு தின விழாவில் வீர தீர செயலுக்கான அண்ணா பதங்கங்களை வழங்கினார். தீயணைப்புத்துறையைச் சேர்ந்த வெற்றிவேலுக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. குடியரசு தினத்தை ஒட்டி ராமநாதபுரத்தைச் சேர்ந்த அமீர் அம்ஷா என்பவருக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது முதல்வர் வழங்கினார். எஸ்.ஏ. அமீர் அம்ஷாவுக்கு மத நல்லிணக்க விருதுடன் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் வழங்கினார்.
வெளிப்பட்டினத்தைச் சேர்ந்த எஸ்.ஏ.அமீர் அம்ஷா மத நல்லிணத்துக்காக பல்வேறு பணிகளை ஆற்றி வருகிறார். இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களின் பிரேதங்களை இலவசமாக நல்லடக்கம் செய்துள்ளார். கொரோனா காலத்தில் சுமார் 200 பிரேதங்களை நல்லடக்கம் செய்துள்ளார் எஸ்.ஏ.அமீர் அம்ஷா. கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுமார் 700 பேருக்கு தேவையான உதவிகளைச் செய்துள்ளார்.
தேனியைச் சேர்ந்த ரா.முருகவேலுக்கு சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது வழங்கப்பட்டது. மாநில அளவில் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து அதிக உற்பத்தி தரும் விவசாயிகளுக்கு விருது வழங்கப்பட்டது. நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி திருந்திய நெல் சாகுபடி மூலம் ஹெக்டேருக்கு 10,815 கிலோ மகசூல் கிடைத்துள்ளது.
சிறந்த காவல் நிலையங்களுக்கான பரிசுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சிறந்த காவல் நிலையத்துக்கான முதலமைச்சர் விருது மதுரை மாநகர காவல் நிலையத்துக்கு வழங்கினார் முதலமைச்சர். சிறந்த காவல் நிலையத்துக்கான முதலமைச்சர் விருது மதுரை மாநகர காவல் நிலையத்துக்கு வழங்கப்பட்டது. திருப்பூர் மாநகர காவல் நிலையத்துக்கு 2ம் பரிசு, திருவள்ளூர் மாவட்ட காவல் நிலையத்துக்கு 3ம் பரிசு வழங்கப்பட்டது.
5 காவலர்களுக்கு கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தியதில் மெச்சத்தக்க வகையில் பணிபுரிந்ததற்காக காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்படுகிறது. விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் பெ.சின்னகாமன். விழுப்புரம் தாலுகா சட்டம்-ஒழுங்கு தலைமைக் காவலர் கி.மகாமார்க்ஸ், துறையூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு தலைமைக் காவலர் க.கார்த்திக், சேலம் ஆயுதப்படை இரண்டாம் நிலைக் காவலர் கா.சிவா, சேலம் ஆயுதப்படை இரண்டாம் நிலைக் காவலர் ப.பூமாலைக்கு காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்பட்டது.


