மும்பை: ஐபிஎல்-ல் உள்ள Impact player விதியை நீக்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் 18வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த சீசனிலும் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ளன. இந்த சீசனுக்கான மெகா ஏலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு வாங்கப்பட்டனர். இதனையடுத்து ஐபிஎல் அணிகள் தங்களது வீரர்களை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. முதல் போட்டி நாளை மறுதினம் நடைபெறவுள்ள நிலையில், இந்த போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த நிலையில், ஐபிஎல்-ல் உள்ள Impact player விதியை நீக்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ள 10 அணி கேப்டன்களுடன் இந்திய கிரிக்கெட் வாரியம் மும்பையில் இன்று ஆலோசனை நடத்தியது. பந்தின் மீது எச்சில் தேய்க்க விதிக்கப்பட்ட தடையை நீக்குவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில், ஐபிஎல்-ல் உள்ள Impact player விதியை நீக்குவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023-ல் அறிமுகப்படுத்த இந்த விதியால் பல ஆட்டங்களின் போக்கு மாறியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.


