Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கிர்கிஸ்தானில் ஈரான் அதிபரைச் சந்தித்துப் பேசிய பிரதமர் மோடி..! கடல்சார் பாதுகாப்பு முதல் வர்த்தகம் வரை விவாதம்...

பிஷ்கெக்: கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி அங்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானை சந்தித்து பேசினார்.

முன்னதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் முழு அளவிலான போருக்கு வழிவகுத்ததைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதமே பிரதமர் மோடி ஈரான் அதிபருடன் தொலைபேசி வாயிலாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேற்கு ஆசியாவில் பதற்றமான சூழல் தற்போதும் நிலவி வரும் வேளையில், இரு தலைவர்களும் நேரில் சந்தித்துப் பேசுவது இதுவே முதல்முறையாகும். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள், இருதரப்பு கூட்டுறவை வலுப்படுத்துதல் மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

குறிப்பாக ஹோர்முஸ் நீரிணை பகுதியில் நிலவும் கடல்சார் பாதுகாப்பு நிலவரம் மற்றும் இந்தியக் கப்பல் மாலுமிகளின் பாதுகாப்பு குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது. தவிர இந்தியாவின் எரிசக்தி தேவைகள் மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத் தொடர்புகள் குறித்தும் பிரதமர் நரேந்திர மற்றும் மசூத் பெசெஷ்கியான் ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.