Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பண்டிகை டைம்ல வேதனையின் உச்சத்துல மக்கள்.!! பரபரப்பான நியூஸை கொடுத்தா வீடுகளில் உலை பொங்காது - திமுக கடும் விமர்சனம்

சென்னை: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததில் இருந்து தொழில்கள் முடங்குகின்றன. வருமானம் இல்லை. விலைவாசி விண்ணை தொடுகிறது. தினசரி கொலை சம்பவங்கள் அதிகரிக்கின்றன. நம் மாநிலத்திற்கு வர வேண்டிய நிறுவனங்கள் ஆந்திராவுக்கு செல்கின்றன.

மின்கட்டணம் மக்களின் கழுத்தை நெரிக்கிறது. ஆனால் இவை எதற்குமே இன்றைய தவெக ஆட்சியாளர்களிடம் தீர்வு இல்லை என்று திமுக கடுமையாக விமர்சித்து உள்ளது. மாநிலத்தில் அவ்வப்போது ஆங்காங்கே முதல்வரை வைத்து ரோடு ஷோ நடத்துகிறார்கள், அதுவும் மக்களுக்கு சலித்துவிட்டது.

அதற்கு நேற்று பெருந்துறையில் கூட்டமே இல்லாமல் காட்சியளித்த அட்டர் ப்ளாப்-ஆன ரோடு ஷோ சாட்சி. வேறு வழி தெரியாமல் ஆட்சி கவிழ்ப்பு என்ற பழைய பல்லவியை தூக்கி கொண்டு வருகிறார் கலெக்சன் குமார் என்றும் திமுக கூறியுள்ளது.

போலீஸ் உங்களிடம் இருக்கிறது; சிபிசிஐடி உங்களிடம் இருக்கிறது. நடவடிக்கை எடுங்கள். யார் தடுத்தார்கள்? அதிமுக ஆட்களை எல்லாம் இழுத்து குதிரை பேரம் நடத்திவிட்டு திமுகவினரை குதிரை பேர வழக்கில் தேடுகிறோம் என்று ஒரு மாதத்தை ஓட்டினார்கள். கிணற்றில் போட்ட கல்லாக அதில் ஒரு முன்னேற்றமும் இல்லை. இப்போது மீண்டும் அதே கதை. அதே பிரேக்கிங் நியூஸ். இன்னொரு மாதத்தை ஓட்டலாம் என்று திட்டமா?

பண்டிகை காலத்தில் மக்கள் வேதனையின் உச்சத்தில் இருக்கிறார்கள். கொஞ்சமாவது அவர்களை குறித்து சிந்தியுங்கள். வெறும் பரபரப்பான செய்திகளை ஊடங்களுக்கு கொடுத்து கொண்டேயிருந்தால் வீடுகளில் உலை பொங்காது என்று தவெக-வின் புளித்து போன திசை மாற்றும் உத்தியை கட்டமாக விமர்சித்துள்ளது திமுக.