Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வேளாண் பட்ஜெட் - மாற்றம் தருவோம் என்று சொன்னார்கள்; உண்மையில் எந்த மாற்றமும் இல்லை..

சென்னை: தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், விவசாயிகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல எந்த ஒரு திட்டங்களும் அறிவிக்கவில்லை. நெல், கரும்புக்கு ஆதார விலை உயர்வு பற்றி அறிவிப்பு எதுவும் இல்லை.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்றும் இன்றும் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் பல ஆண்டுகளாக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் பெயர் மட்டும் மாற்றப்பட்டுள்ளது. சொல்லி கொள்ளும் அளவிற்கு புதிய திட்டங்கள் எதுவுமே இல்லை. முக்கியமாக 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் மற்றும் நெல் சேமிப்புக்கிடங்குகள் தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. செயற்கை உரத்தை பயன்படுத்துவதால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்கள் வெளிநாடுகளில் வாங்கப்படுவதில்லை. எனவே இயற்கை உரம் பயன்படுத்த விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும்.

இந்த பட்ஜெட்டினால் விவசாயிகளுக்கு எந்த ஒரு மாற்றமும் இல்லை; இது மிகப்பெரிய ஏமாற்றம். மொத்தத்தில் விவசாயத்தை மேம்படுத்த புதிய மற்றும் தொலைநோக்கு திட்டங்கள் எதையும் அறிவிக்காமல் வெறும் செய்தித்தாள்களை வாசிப்பது போல இந்த பட்ஜெட்டை வாசித்துள்ளனர். அரசு நிலங்கள் மற்றும் சீமைக் கருவேல மரங்கள் நிறைந்த பகுதிகளை அகற்றி, அந்த இடங்களை விவசாயிகளுக்குக் குத்தகைக்கு விட வேண்டும் என்று பிரமலதா விஜயகாந்த் யோசனை தெரிவித்து உள்ளார்.