Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

காவலர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை தேவை - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: சட்டப்பேரவையில் இன்று பேசிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை 100 ஏரிகளில் சேமிக்கும் திட்டம் ஆமைவேகத்தில் நடக்கிறது. எனவே மேட்டூர் அணை தண்ணீரை 100 ஏரிகளுக்கு வழங்கும் திட்டத்தை நிறைவேற்றித் தர வேண்டும். ஜலகண்டாபுரம் பகுதியில் புறவழிச் சாலை அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக சென்னை இருந்தது.

இக்கட்டான சூழலில் பணியாற்றும் காவல்துறையினருக்கு நாம் உதவிகரமாக இருக்க வேண்டும். குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் காவல்துறையினர் சிறப்பாக பணியாற்றினர் என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார். காவலர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். காவலர்களின் பணி ஓய்வுக்கு ஓராண்டுக்கு முன்பே பணியிடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். 625 பேருக்கு ஒர் காவலர் என்பது போதுமானது அல்ல, மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப காவலர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். காவலர்கள் எண்ணிக்கை அதிகரித்தால் தான் தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழும் என்று வலியுறுத்தினார். அதிமுக ஆட்சியில் காவலர்களுக்கு முறையாக பதவி உயர்வு வழங்கினோம் குறிப்பிட்டார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என குற்றம்சாட்டி உள்ளார். தவெக ஆட்சியில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. தமிழகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. தவெக ஆட்சியில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டி உள்ளார். மாத்திரை, பவுடர், சாக்லேட் என பல்வேறு வடிவங்களில் போதைப்பொருள் புழக்கம் இருக்கிறது என்றார். தவெக ஆட்சிக்கு வந்த 116 நாட்களில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது எனவும் சாடி உள்ளார். சிங்கப் பெண் பாதுகாப்பு படைக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்படவில்லை. போதைப்பொருள் விற்பனை பற்றி தகவல் தருபவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. போதைப்பொருள் விற்பனை பற்றி தகவல் தந்த 2 மாணவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். மாநில எல்லைகளில் சோதனைச் சாவடிகளை அமைத்து போதைப் பொருள் கடத்தலை தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.