சென்னை: சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் துவங்கியது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் மானியக் கோரிக்கையை முன்மொழிந்தார் முதல்வர் விஜய். மேலும் பல முக்கிய அறிவிப்புகளையும் முதல்வர் வெளியிட்டார்.
தமிழகத்தில் புதிதாக 29,108 காவல் பணியிடங்கள் உருவாக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்து உள்ளார். விரைவில் 10,000 காவலர்கள் நியமிக்கப்படுவர், இதில் 5,000 பெண் காவலர்கள் அடக்கம். காவல்துறையை நவீனமயமாக்க ரூ.212 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். காவல் நிலையங்களுக்கு சில்லறை செலவினம் உயர்த்தி வழங்கப்படும் எனவும் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். ரூ.14 கோடியில் டிஎன்ஏ பரிசோதனை மையம் அமைக்கப்படும். 6 இடங்களில் புதிய தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும் எனவும் முதல்வர் விஜய் அறிவித்து உள்ளார்.



