Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் மோடி ஆலோசனை!

டெல்லி: காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் மேல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் உயிரிழப்பு எண்ணிக்கை 28ஆக உயர்ந்துள்ளது. 13 பேர் காயமடைந்துள்ளனர்.

பஹல்காம் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள். அவர்கள் தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து பிரதமர் மோடி சவுதி அரேபியா பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு நாடு திரும்பினார். இந்நிலையில், காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஆலோசனையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். ஆலோசனையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.