Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முதற்கட்டமாக 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், 50 ஆரம்ப சுகாதார நிலையங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

சென்னை: சென்னை அடையார் சாஸ்திரி நகரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நகர்புற நல்வாழ்வு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து பார்வையிட்டார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மாநகராட்சி மற்றும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக நகர்புற நல்வாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். மேலும் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்களையும், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களையும் காணொலி காட்சி மூலமாக தமிழகத்தில் உள்ள 34 மாவட்டங்களிலும் திறந்துவைத்தார்.

நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்படும். மக்கள் இருக்ககூடிய இடங்களுக்கு நேரடியாக மருத்துவத்தை கொண்டு செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் 208 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் கட்டப்பட்டுள்ளன. தலா 25 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த திட்டதிற்கு மொத்தமாக ரூ.52 கோடி மதிப்பீட்டில் இந்த கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.

அதேபோல 50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 28 கிராமபுறங்களிலும், 22 நகர்ப்புறங்களிலும் சுமார் ரூ.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்களை முதல்வர் திறந்துவைத்தார்.