Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தைரியத்துடனும், உறுதியுடனும் போராடுவதை தவிர வேறு வழியில்லை - நேபாள பிரதமர் பேச்சு

காத்மாண்டு: நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் பெருவெள்ளம் குறித்து அந்நாட்டின் பிரதமர் பலேந்திர ஷா நேபாள நாடாளுமன்றத்தில் பேசினார். இந்த கடினமான நேரத்தில் நாங்கள் பாதிக்கப்பட்ட மக்களுடன் துணை நிற்கிறோம். இந்த பேரழிவு சம்பவம் குறித்து எங்களுக்கு தகவல் தெரியவந்த உடனேயே, எங்கள் குழுக்களை நாங்கள் உஷார்படுத்தினோம்.

காலை 9:15 மணிக்கு ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. காலை 10:30 மணிக்குள்ளாகவே அவசரகால மீட்புக் குழுக்கள் களத்தில் இறங்கத் தயாராக இருந்தன. மக்களை மீட்பதே எங்களின் முன்னுரிமையாக இருந்தது என்று கூறினார். தொடர்ந்து பேசிய நேபாள பிரதமர், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள ராணுவ ஹெலிகாப்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மதியம் சுமார் 1 மணியளவில் தான் உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை எங்களால் தொடர்பு கொள்ள முடிந்தது என்றார்.

வெளிநாட்டு குடிமக்களை தேடி மீட்க ஒரு பிரத்யேகக் குழு அமைக்கப்பட்டது. மீட்புப் பணியில் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. 10 லாரிகளில் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டன, மேலும் அனைத்து அமைச்சர்களும் தங்கள் ஒரு மாத சம்பளத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணம் வழங்கு பணிகளுக்காக கொடுக்க முடிவு செய்தனர் என்றார். போட்டே கோசி (Bhote Koshi) ஆற்றில் ஏற்பட்ட பெரு வெள்ளம் ஒட்டுமொத்த நாட்டின் பெரும் துயரம் என்றும் நேபாள பிரதமர் கூறியுள்ளார்.

தற்போது வரை 11,993 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 1,114 உயிரிழந்த உடல்கள் மீட்கப்பட்டன, குறைந்தபட்சம் சுமார் 3,916 பேருடன் எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. மேலும் இந்த இக்கட்டான நேரத்தில், இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிடமிருந்தும், பல்வேறு வங்கிகளிடமிருந்தும் எங்களுக்கு ஆதரவு கிடைத்துள்ளது, இந்த நாடுகளுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் என்றார். மேலும் இந்த பேரழிவிலிருந்து மீண்டு வர "உறுதியுடனும் தைரியத்துடனும் போராடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை, நாம் போராடுவோம்," என்றும் அவர் கூறினார்.