சென்னை: சென்னையில் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். மோடி, அமித் ஷா ஆகியோர் ஒ.பி.எஸ்.ஸை தொடர்ந்து புறக்கணித்து வந்த நிலையில் பாஜகவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டார். 1999ல் பாஜக கூட்டணியில் இருந்து விலகியதால்தான் அதிமுக 2001ல் அமோக வெற்றி பெற்றதாக ஓ.பி.எஸ். அறிக்கை வெளியிட்டிருந்தார். பாஜக கூட்டணியில் இருந்து விலகி ஜெயலலிதா வரலாற்றுப் புரட்சி செய்ததாக ஓ.பி.எஸ். அறிக்கை வெளியிட்டிருந்தார். தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி வழங்காத ஒன்றிய அரசின் செயல், கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது எனவும் ஓ.பி.எஸ். அறிக்கை வெளியிட்டிருந்தார்.
பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வரும் நிலையில் கூட்டணி குறித்து இன்று ஓ.பி.எஸ் அறிவிக்க உள்ளதாக நேற்று தெரிவித்தார். இந்நிலையில் சென்னையில் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த வந்த போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகலா என்பது குறித்து ஆலோசனைக்கு பிறகு முடிவு. தலைமைக் கழக நிர்வாகிகளுடன் ஆலோசித்து நல்ல முடிவாக அறிவிப்பேன். தலைமைக் கழக நிர்வாகிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்திக்கிறேன் என்று கூறினார்.
தொடர்ந்து சென்னையில் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனைக் கூட்டத்தில் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் பங்கேற்றுள்ளனர்.