சென்னை: கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் எத்தனால் உற்பத்தி செய்வது குறித்த திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் வினோத் கூறினார். வெற்றி இல்லத்தரிசி வீட்டு திட்டம் ரூ.10 கோடியில் செயல்படுத்தப்படும்.
17,000 ஏக்கரில் விதை கரும்பு மானிய திட்டம் ரூ.9 கோடியில் செயல்படுத்தப்படும். பனை பாதுகாப்பு திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். தமிழ்நாடு தளிர் கீரைகள் திட்டம் ரூ.1.20 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும். ரூ.50 லட்சம் செலவில் 50 சிறியளவிலான காளான் உற்பத்தி கூடங்கள் ஏற்படுத்தப்படும். தமிழ்நாடு தென்னை பதப்படுத்தும் கழகத்திற்கு ரூ.5.30 கோடி நிதி ஒதுக்கப்படும். தரம்மிக்க வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்ய ரூ.8.43 கோடி நிதி ஒதுக்கப்படும்.
ரூ.3 கோடியில் வேளாண் கண்காட்சி நடத்தப்படும். இதில் வேளாண் சார்ந்த புதிய முயற்சிகள் காட்சிப்படுத்தப்படும். ரூ.7 கோடியில் விதை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.15 கோடியில் 3 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் பசுமை குடில்கள் அமைக்கப்படும் என்றார். மேலும் ரூ.6 கோடியில் 6000 ஏக்கரில் வாழை திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

