Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தேசமே முதன்மை என்பதுதான் பாஜகவின் முன்னுரிமை; மக்கள் எங்கள் வளர்ச்சி மாடலை ஆதரித்துள்ளனர் : பிரதமர் மோடி உரை

டெல்லி : குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், மாநிலங்களவையில் பிரதமர் மோடி பதிலுரை அளித்தார். அதில், "குடியரசுத் தலைவரின் உரை உத்வேகம் அளிப்பதாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது.ஜனாதிபதியின் உரை நம் அனைவருக்கும் முன்னோக்கி செல்லும் வழியையும் காட்டியது. அனைவருக்குமான வளர்ச்சி என்பதை சிலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வளர்ச்சி மீதான பார்வையால் நாட்டு மக்கள் தங்களை 3வது முறையாக தேர்ந்தெடுத்துள்ளனர். மக்களின் நலனுக்காக வளங்களை உகந்த முறையில் பயன்படுத்தி உறுதி செய்வதே எங்கள் முயற்சி ஆகும்.

மக்களவை தேர்தலில் இரண்டு முறை தோற்கடிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன். 3 தசாப்தங்களாக கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, ஓபிசி ஆணையத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்படாமல் இருந்தது.ஓபிசி ஆணையத்துக்கு பாஜக அரசுதான் சட்ட அங்கீகாரம் வழங்கியது; பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கு சுமூகமான முறையில் இட ஒதுக்கீடு தரப்பட்டது. பட்டியலினம் உள்பட அனைத்து சமுதாயத்தினரும் இதை வரவேற்றனர். இரு அவைகளிலும் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கியதும் பாஜக அரசு தான். புதிய நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட்ட முதல் முடிவு, பெண்களுக்கு அதிகாரமளிப்பதை கவுரவப்படுத்துவதாகும்.பட்டியலின மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக எஸ்.டி.. எஸ்.சி. சட்டங்களை வலுப்படுத்தியுள்ளோம். தேசமே முதன்மை என்பதுதான் பாஜகவின் முன்னுரிமை; மக்கள் எங்கள் வளர்ச்சி மாடலை ஆதரித்துள்ளனர்,"இவ்வாறு தெரிவித்தார்.