Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பாலங்களின் கட்டுமான பணிகள் தொடரும் - அமைச்சர் தகவல்

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரம் துவங்கிய நிலையில், சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். சூலூரில் மேம்பாலம் கட்ட ஆய்வு மேற்கொள்ள கொள்கை அளவில் ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பதில் அளித்துள்ளார்.

உறுப்பினர் சுகுமார் பேசுகையில் தேசிய நெடுஞ்சாலை பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதாகவும், விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். ஆய்வு செய்து விரைந்து பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என ஆதவ் அர்ஜுனா கூறினார்.

காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலை செய்து தர வேண்டும் என உறுப்பினர் சீனிவாச சேதுபதி கோரிக்கை விடுத்தார். கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்றார் அமைச்சர். தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா 40 உறுப்பினர்கள் ரயில்வே மேம்பாலம் தொடர்பாக கோரிக்கை வைத்துள்ளனர், இது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

குளித்தலையில் ரயில்வே மேம்பாலம் அமைத்து தர வேண்டும் சூரியனூர் சந்திரனம் கோரினார். திமுக ஆட்சியில் கட்டப்பட்டு வந்த சிறிய பாலங்களின் தற்போதைய நிலை என்ன என்று திமுக எம்எல்ஏ எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார். திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பாலங்களின் கட்டுமான பணிகள் தொடரும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதில் அளித்தார்.