Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மேட்டூர் அணை நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு... அணையின் நீர்மட்டமும் உயர்வு.!

மேட்டூர்: இன்று மாலை 4 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கான நீர் வரத்து 18,905 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து காவிரி நீர் திறக்கப்பட்டதை அடுத்து, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 18,905 கன அடியாக அதிகரித்து உள்ளது. தற்போது அணையின் நீர் மட்டம் 74.55 அடியாக உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்து நீர் இருப்பு 36.740 டி.எம்.சி. ஆகவும் உயர்ந்துள்ளது

அணையில் இருந்து திறக்கும் நீரின் அளவு தொடர்ந்து 1500 கன அடியாக உள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக கேரளம் மாநிலத்தில் வயநாடு, கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்கிறது. இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை மற்றும் அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் காரணமாக தற்போது மேட்டூர் அணைக்கு அதிகளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 11,998 கன அடி நீர்வரத்து பதிவானது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 74.01 அடியாக உயர்ந்திருந்தது. நீர் இருப்பு 35.244 டி.எம்.சி.யாக இருந்தது குறிப்பிடத்தக்கது.