Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாட்டையே உலுக்கிய மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை: மும்பை என்.ஐ.ஏ. நீதிமன்றம் தீர்ப்பு

மும்பை: நாட்டையே உலுக்கிய மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யாக் சிங் தாக்குர் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த 2008 செப்டம்பர் 29ல் மகாராஷ்டிராவின் மாலேகான், நாசிக்கில் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் வெடித்த சம்பவத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர். இந்த குண்டுவெடிப்பில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக பெண் சாமியாரும், பாஜக எம்.பியுமான பிரக்யா சிங் தாகூர், ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். மும்பையில் உள்ள என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில், இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.

மகாராஷ்டிரா பயங்கரவாதத் தடுப்புப் படை, இந்த வழக்கை முதலில் விசாரித்தது. பின்னர் தேசிய புலனாய்வு முகாமை இவ்வழக்கை விசாரித்தது. இந்த வழக்கின் விசாரணைகள் அனைத்தும் கடந்த ஏப்ரல் மாதத்தில் முடிவடைந்து தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டது. 17 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்ற நிலையில் மும்பை என்.ஐ.ஏ. நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யாக் சிங் தாக்குர், லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் உள்ளிட்ட 7 பேரும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. ராஜா ரஹீர்கர், சுவாமி அம்ரூதானந்த், சுதாகர் சதூர்வேதி ஆகியோரையும் விடுதலை செய்தது.

இந்த சம்பவத்தில் பிரக்யா சிங் தாக்குருக்கு தொடர்பு இருப்பதை நிரூபிக்க அரசு தவறிவிட்டது. பிரசாத் புரோஹித் வீட்டில் வெடிபொருள்கள் வைத்திருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. கைரேகை, வெடிமருந்து குப்பை என எதுவும் சேகரிக்கப்படவில்லை. அபினவ் பாரத் அமைப்பு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பணத்தைப் பயன்படுத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. குற்றச்சாட்டிற்கு உரிய ஆதராத்தை வழங்க தவறிவிட்டதாக கூறி அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்பில் உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதி அளிக்க வேண்டும். குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.