Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலை 'வாழை’ வலிமையாக பேசுகிறது : மாரி செல்வராஜுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை : வாழை படத்தை எடுத்த இயக்குனர் மாரி செல்வராஜுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக மாறியுள்ளார் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள திரைப்படம் வாழை.இதுவரை இவர் இயக்கத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய மூன்று படங்களின் வெற்றியை தொடர்ந்து உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட வாழை படமும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் மாரி செல்வராஜ் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின்,"உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் வாழை-யை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி மாரி செல்வராஜ் பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி! பசிக் கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன். காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம்! தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்துவரும் மாரி செல்வராஜ் அவர்களுக்கு மீண்டும் வாழ்த்துகள்!,"இவ்வாறு தெரிவித்துள்ளார்.