Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

வாக்காளர் நீக்கங்கள் தேர்தல் முடிவுகளை மாற்றியதா.? - மு.க.ஸ்டாலின் எழுப்பியுள்ள அதிரடி கேள்விகள்...

சென்னை: தேர்தல் ஆணையத்தின் நடைமுறைகள் மற்றும் முறைகேடுகளைச் சுட்டிக்காட்டயுள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், எங்களின் கேள்விகளுக்குப் பதில் வேண்டும்..! ஜனநாயகத்திற்கு நீதி வேண்டும் என்று கூறியுள்ளார். தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், SIR-ஐ ரத்து செய்ய வேண்டும், தேர்தல்களில் மீண்டும் வாக்குச்சீட்டு முறை பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் மாண்புமிகு குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பியுள்ளதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பான எக்ஸ் பதிவில் அவர் எழுப்பியுள்ள கேள்விகளாவன;

* 97 இலட்சம் வாக்காளர்கள் பட்டியலில் ஏன் இல்லை?

* வாக்காளர் நீக்கங்கள் தேர்தல் முடிவுகளை மாற்றியதா?

* தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை எங்கே?

இவை வெறும் கேள்விகளல்ல; ஜனநாயகத்தின் அடித்தளத்தையே உலுக்கும் குற்றச்சாட்டுகள்! மேலும் வாக்குரிமை என்பது சலுகையல்ல; அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமை! ஒவ்வொரு வாக்கும் கணக்கில் வர வேண்டும். ஒவ்வொரு வாக்காளரின் உரிமையும் காக்கப்பட வேண்டும். மொத்தத்தில் எங்களின் கேள்விகளுக்குப் பதில் வேண்டும்! ஜனநாயகத்திற்கு நீதி வேண்டும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.