Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி

மும்பை : மும்பை - லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்தது.

மும்பை அணிக்காக அதிகபட்சமாக ரியான் ரிக்கல்டன் 58 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 54 ரன்களும் எடுத்தனர். லக்னோ அணி தரப்பில் மயங்க் யாதவ், அவேஷ் கான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பிரியன்ஸ் யாதவ், திக்வேஷ் ரதி, ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. லக்னோ அணி 20 ஓவர்களில் வெறும் 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் மும்பை அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

லக்னோ அணி தரப்பில் அதிகபட்சமாக ஆயுஷ் பதோனி 35 ரன்களும், மிட்செல் மார்ஷ் 34 ரன்களும் எடுத்தனர். மும்பை அணிக்காக, ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். டிரென்ட் போல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வில் ஜாக்ஸும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி12 புள்ளிகளுடன் 2வது இடத்திற்கு முன்னேறியது.