Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கூகுள் மேப்களில் எஸ்பிஐ ஏடிஎம்களை குறிவைத்து கொள்ளை: வடமாநில கும்பல் சிக்கியது எப்படி என சேலம் சரக டிஐஜி விளக்கம்

நாமக்கல்: கூகுள் மேப்களில் எஸ்பிஐ ஏடிஎம்களை குறிவைத்து கொள்ளை: வடமாநில கும்பல் சிக்கியது எப்படி என சேலம் காவல்துறை சரக டிஐஜி உமா விளக்கம் விளக்கம் அளித்துள்ளார். அதில்,

போலீசாரை கற்களை வீசி தாக்கியதால் துப்பாக்கிச்சூடு: டிஐஜி

கற்களை வீசி போலீசாரை தாக்கியதால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என சேலம் சரக டிஐஜி உமா தெரிவித்துள்ளார். தப்பிச் சென்ற இருவரில் ஜூமான் என்பவர் போலீசாரை தாத்தியதால் என்கவுன்டர் செய்யப்பட்டார். தப்பிச்சென்ற மற்றொருவரான அசார் அலி என்பவரை காவல்துறையினர் காலில் சுட்டுப் பிடித்தனர். பணப்பையுடன் ஓடிய அஸ்ரூவை காலில் சுட்டுப் பிடித்தோம்; எவ்வளவு பணம் என்பது கணக்கிடவில்லை. பிடிக்கப்பட்ட 5 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில் முழு விவரங்களும் தெரியவரும் என்றும் சேலம் சரக டிஐஜி உமா தெரிவித்தார்.

கூகுள் மேப் மூலம் எஸ்.பி.ஐ. ஏடிஎம்களை குறி: டிஐஜி உமா

கூகுள் மேப்களில் எஸ்பிஐ ஏடிஎம்களை குறிவைத்து பார்த்து நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது தமிழகத்தில் எந்த வழக்குகளும் இல்லை. கிருஷ்ணகிரி ஏடிஎம் கொள்ளையில் தொடர்பு உள்ளதா என்பது விசாரணைக்குப்பின் தெரியும். கிருஷ்ணகிரி ஏடிஎம் கொள்ளையில் ஏற்கெனவே ஜகதானவர்களும் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள்.

கொள்ளையர்கள் கைதில் நடந்தது என்ன?: டிஐஜி உமா பேட்டி

திருச்சூரில் கொள்ளை சம்பவம் நடந்த பிறகு மேற்கு மண்டலம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டது. வேகமாக வந்த கண்டெய்னர் லாரி சாலையில் சென்ற வாகனங்கள் மீது மோதிவிட்டு சென்று கொண்டிருந்தது. பிடிபட்டது ஏடிஎம்களை குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பல் என்பது தெரியவந்துள்ளது. கண்டெய்னர் லாரிக்குள் ஆட்கள் இருந்தது முதலில்

காவல்துறைக்கு தெரியாது. கண்டெய்னரில் இருந்த காரை பயன்படுத்தி ஏடிஎம்களில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். பிடிபட்ட அனைவரும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொள்ளையில் ஈடுபட்ட 7 பேர் கும்பலில் பல்வால் மாவட்டம் 5, நூ மாவட்டத்தை சேர்ந்தோர் இருவர் ஆவர்.

ஏடிஎம் கொள்ளையர்களை விசாரிக்க கேரள போலீஸ் வருகை

குமாரபாளையம் அருகே கண்டெய்னர் லாரியுடன் பிடிபட்ட ஏடிஎம் கொள்ளையர்களிடம் விசாரணை நடத்த கேரள போலீஸ் வருகை. திருச்சூர் காவல் ஆய்வாளர் ஜிஜோ தலைமையில் 4 போலீசார் வெப்படை காவல் நிலையம் வந்துள்ளனர். வெப்படை காவல் நிலையத்தில் வைத்து 5 கொள்ளையர்களிடம் விசாரணை நடத்த திருச்சூர் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

ஏடிஎம் கொள்ளையர்களிடம் இருந்து கூர்மையான ஆயுதங்கள்

கொள்ளையர்களிடம் இருந்து கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கொள்ளையர்களிடம் இருந்து துப்பாக்கி ஏதும் கைப்பற்றப்படவில்லை.

திருச்சூரில் கொள்ளையடித்தது மேவாட் கொள்ளையர்கள்

திருச்சூரில் ஏ.டி.எம்.களில் கொள்ளையடித்தது அரியானாவைச் சேர்ந்த மேவாட் கொள்ளையர்கள் என்று தெரிய வந்துள்ளது.தென்னிந்தியாவில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட ஏடி.எம். இயந்திரங்களில் கொள்ளையடித்துள்ளனர்.