Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜெட் வேகத்தில் தங்கம் விலை: பவுனுக்கு ரூ.71 ஆயிரத்தை தாண்டியது- நடுத்தர மக்கள் அதிர்ச்சி!!..

சென்னை: ஜெட் வேகத்தில் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டு வருகிறது. தங்கம் பவுனுக்கு ரூ.71 ஆயிரத்தை தாண்டியது. தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் முதல் அதிரடியாக உயர்ந்து தினம், தினம் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 9ம் தேதியில் இருந்து மீண்டும் அதிரடியாக தங்கம் விலை உயர தொடங்கியது.

நேற்றைய தினம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.70,520க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ரூ.8,815க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. சில்லறை வர்க்கத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.110க்கு விற்பனையானது.

இந்நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.71,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ரூ.8,920க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை எவ்வித மாற்றமின்றி அதே விலையில் ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது. இனி வரும் காலங்களிலும் தங்கம் விலை உயருவதற்கான வாய்ப்பே அதிகம் உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.