Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

இந்திய தேர்தல் முறையில் நிறைய பிரச்னைகள் இருக்கு..! அமெரிக்காவில் ராகுல் காந்தி விமர்சனம்

நியூயார்க்: இந்திய தேர்தல் முறையில் நிறைய பிரச்னைகள் உள்ளன என்று அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி விமர்சனம் செய்தார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, இரண்டு நாள் பயணமாக அமெரிக்கா சென்றார். இன்றும் நாளையும் ரோட் ஐலேண்டில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். குறிப்பாக தொழிலதிபர்கள், வெளிநாடு வாழ் இந்திய சமூகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோருடன் உரையாடினார்.

அப்போது அவர் ஆற்றிய உரையில்,

‘இந்திய தேர்தல் முறையில் நிறைய பிரச்னைகள் உள்ளன. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களின் வாக்கு எண்ணிக்கையை விட அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன. இதுபோன்ற சம்பவம் நடந்தது உண்மை. தலைமை தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு நாளான்று மாலை 5.30 மணி வரையிலான வாக்குப்பதிவு தரவுகளை வெளியிட்டது. ஆனால் மாலை 5.30 முதல் 7.30 மணி வரை வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டிருக்க வேண்டிய நேரத்தில், 65 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்ததாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற நிகழ்வு நடப்பதற்கு சாத்தியமே இல்லை.

ஏனெனில், ஒரு வாக்காளர் வாக்களிக்க சுமார் 3 நிமிடங்கள் ஆகும். இதை கணக்கிட்டால், அன்றிரவு 2 மணி வரை வாக்காளர்கள் வரிசையில் நின்று, இரவு முழுவதும் வாக்களித்திருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. 65 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்ததாக கூறப்படும் நிகழ்வை வீடியோ பதிவு செய்யப்பட்டதா? என்று தேர்தல் ஆணையத்திடம் கேட்டோம். அவர்கள் வீடியோ பதிவை தர மறுத்தது மட்டுமல்லாமல், சட்டத்தையே மாற்றிவிட்டனர். தேர்தலை நடத்துவதில் ஏதோ மிகப்பெரிய தவறு உள்ளது என்பதை மிகத் தெளிவாகத் தெரிந்து கொண்டோம். இதுகுறித்து பகிரங்கமாக பொதுவெளியில் கூறியுள்ளோம்’ என்று கூறினார்.