Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதை தொடர்ந்து, காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியது

காஷ்மீர்: இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதை தொடர்ந்து, காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியது. பூஞ்ச், ஜம்மு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வழக்கம் போல் சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. வெறிச்சோடி காணப்பட்ட சாலைகளில் தற்போது வழக்கம் போல் வாகனங்கள் செல்ல துவங்கியது

போர் நிறுத்தத்தால் இந்தியா - பாகிஸ்தான் எல்லையான ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவி வருகிறது. ஜம்மு - காஷ்மீரில் நள்ளிரவில் பாகிஸ்தான் எந்தத் தாக்குதலும் நடத்தாத நிலையில், அப்பகுதி இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.

கடந்த சில நாள்களாக நள்ளிரவு மற்றும் அதிகாலையில் பாகிஸ்தான் தாக்குதல்கள் நடந்திருந்த நிலையில், இரவில் ட்ரோன் அல்லது துப்பாக்கிச்சூடு தாக்குதல்கள் நடைபெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்னூர், பிரோஸ்பூர், ரஜோரி, பூஞ்ச், ஜம்மு உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ள சனிக்கிழமை பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட நிலையில், அடுத்த சில மணி நேரங்களிலேயே அதை மீறி எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. சண்டை நிறுத்த அறிவிப்பு வெளியான அடுத்த சில மணி நேரத்திலேயே அதை மீறி ஜம்மு-காஷ்மீர் மற்றும் குஜராத்தின் பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மூலம் சனிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் அனைத்து ட்ரோன்களையும் இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்தது குறிப்பிடத்தக்கது.