Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

இந்து சமய அறநிலைய துறைக்கு ரூ.708 கோடி நிதி.. பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை: இந்து சமய அறநிலைய துறைக்கு ரூ.708 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மரிய வில்சன் அறிவித்து உள்ளார். கோயில் சொத்துக்களை பாதுகாக்க தனி கவனம் செலுத்தப்படும். 3,000 கோயில்களில் 5 ஆண்டுகளில் திருப்பணி மற்றும் குடமுழுக்கு செய்யப்படும். 2026-27-ஆம் ஆண்டில் மாநில அரசின் வருவாய் ரூ.3,50,027 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக பட்ஜெட் உரையில் தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது. அதே போல ரேஷன் கடைகளில் பாக்கெட் கோதுமை மாவு வழக்கை திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

காவிரி-வைகை-குண்டாறு நதி இணைப்புத் திட்டத்திற்கு ரூ. 150 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பெண்ணையாறு-செய்யாறு, பெண்ணையாறு-பாலாறு & தாமிரபரணி வைப்பாறு திட்ட அறிக்கையினை தயார் செய்ய ரூ. 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2031-க்குள் உலகத் தர நகரங்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.