Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 24ம் தேதி வரை நீட்டித்து கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழக உயர்கல்வித் துறையில் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான இளநிலை பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இதற்கான, 2024-25ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த 6ம் தேதி ஆன்லைன் (www.tngasa.in) வாயிலாக தொடங்கியது.

விண்ணப்ப பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே ஏராளமான மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர். விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையவிருந்த நிலையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கட்டணம் செலுத்தும் முறை:

விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Debit Card Credit Card / Net Banking / UPI மூலம் இணையதளம் வாயிலாகச் செலுத்தலாம். இணையதளம் வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் கல்லூரிச் சேர்க்கை உதவி மையங்களில் "The Director, Directorate of Collegiate Education, Chennai 15" என்ற பெயரில் 06/05/2024 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை மூலமாக அல்லது நேரடியாகச் செலுத்தலாம். மாணவர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மேற்குறித்த இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம். என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.