Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரிப்பு; ரூ.1,13,760-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,760-க்கு செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.260-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார நிலைமைகள், அமெரிக்க டாலரின் மதிப்பு மாற்றம், வட்டி விகித ஏற்றத்தாழ்வுகள், புவியியல் அரசியல் பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,13,600க்கு விற்பனையானது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.14,200க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.