Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ஒரே நாளில் இரண்டு முறை குறைந்த தங்கம் விலை.!! மக்கள் மகிழ்ச்சி

சென்னை: நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதுவும் இன்று ஒரே நாளில் தங்கம் விலை காலை, மாலை என இருமுறை குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1,600 வரை குறைந்துள்ளது பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.560 குறைந்த நிலையில், மாலை ரூ.1,040 குறைந்து, இன்று ஒரே நாளில் மொத்தமாக ரூ.1,600 குறைந்துள்ளது.

சென்னையில் ஒரு சவரன் தங்கம் தற்போது ரூ.1,05,600-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரம் ஒரு கிராம் தங்கம் ரூ.13,200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக இன்று காலை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,06,640க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.13,330-க்கு விற்பனை செய்யப்பட்டது.