Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காவல்துறையினருக்கு ரூ.431 கோடியில் புதிய குடியிருப்பு வளாகங்கள்...

சென்னை: பூந்தமல்லி - போரூர் - வடபழனி மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என்று நிதி அமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டின் போது அறிவித்துள்ளார். சென்னைக்கு 1,000 புதிய AC மின்சாரப் பேருந்துகள் வாங்க மற்றும் பணிமனை கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.29,863 கோடி நிதி ஒதுக்கப்படும். அதே போல ஹஜ் மானியம் ரூ.25,000-த்தில் இருந்து ரூ.35,000-ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. போதை இல்லா தமிழகத்தை உருவாக்க ரூ.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

2,500 ஹெக்டரில் அலையாத்தி காடுகளை உருவாக்க ரூ.40 கோடி, சூப்பர் எல் நினோவால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள ரூ.340 கோடி, உள்துறை & மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைக்கு ரூ.17,290 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண் மற்றும் உழவர் நலத்துறைக்கு ரூ.14,984 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினருக்கு ரூ.431 கோடி மதிப்பீட்டில் புதிய குடியிருப்பு வளாகங்கள் அமைக்கப்டும், இதனால் 5,000 காவலர் குடும்பங்கள் பயன்பெறுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கிராம வேலை உறுதி மற்றும்

வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் வெற்றி 150 திட்டம் அறிமுகம் செய்யப்படும். 125 நாட்கள் வேலையை முடித்த குடும்பங்களுக்கு 25 நாட்கள் கூடுதலாக வேலை வழங்கப்படும், இதற்காக ஆண்டுதோறும் ரூ.100 கோடி ஒதுக்கப்படும் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.