முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தது தவெக அரசு... அரசுப்பள்ளிகளில் சூப்பர் கிளீன், சூப்பர் கேம்ப்பஸ் திட்டங்கள் செயல்படுத்தப்படும்
சென்னை: தவெக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தனது முதல் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தது. பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி அமைச்சர் மரிய வில்சன், ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் ஏராளமான சாதனைகளை முதல்வர் விஜய் படைத்து உள்ளதாக குறிப்பிட்டார்.
200 யூனிட் இலவச மின்சாரம் மூலம் மக்களின் மின்கட்டண சுமை குறைந்துள்ளது. வறுமை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க, 2026ம் ஆண்டுக்குள் 1.5 ட்ரில்லியன் டாலர் பொளாதாரம் உள்ள மாநிலமாக மாற்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் தாய்மாமன் சீர் திட்டம் தொடங்கப்படும் என்றும் மரிய வில்சன் அறிவித்துள்ளார். வெற்றி தமிழகம் என்ற பெயரில் தொலைநோக்கு திட்டங்களை செய்லபடுத்த முடிவு செய்துள்ளோம். அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கு ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரசுப்பள்ளிகளில்...
3,734 அரசுப்பள்ளிகளை மேம்படுத்த ரூ.2,312 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுப்பள்ளிகளில் சூப்பர் கிளீன், சூப்பர் கேம்ப்பஸ் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்து உள்ளார். முதல் கட்டமாக 10,000 பள்ளிகளில் இப்பணிகளை மேற்கொள்ள ரூ.129 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளில் போதைப்பொருள் தொடர்பாக புகார் அளிக்க 1058 என்ற இலவச அறிமுகம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 5 லட்சம் மாணவர்களுக்கு நவீன சைக்கிள், தண்ணீர் பாட்டில் மற்றும் ஹெல்மெட் வழங்கப்படும். பள்ளிகளில் போதை ஒழிப்பு திட்டத்திற்கு ரூ.7 கோடி ஒதுக்கப்படும். ரூ.10 கோடி செலவில் மாநிலம் முமுவதும் பொது நூலகங்கள் மேம்படுத்தப்படும். பள்ளிக்கல்வி துறைக்கு பட்ஜெட்டில் ரூ.44,571நிதி ஒத்துக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
