Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

குடியிருப்புகளில் EV சார்ஜிங் நிலையங்கள் அமைக்க மானியம்... பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை: தலைநகர் சென்னையில் மின்பகிர்மான திறன் ரூ.1,390 கோடியில் வலுப்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் பொருத்தப்படும். மாநிலத்தின் பிற பகுதிகளில் 50 லட்சம் தொழில், வணிக நுகர்வோருக்கு ஸ்மார்ட் மின்மீட்டர் பொருத்தப்படும். ரூ.16 கோடி நிதியுடன் தமிழ்நாடு பனை மேம்பாட்டு கழகம் நிறுவப்படும். சென்னையை உலக் தரத்திற்கு உய்த்தும் ஆய்வு பணிகளுக்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி அமைச்சர் மரிய வில்சன்.

நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு பட்ஜெட்டில் ரூ.8,252 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை நகரில் 20 ஸ்மார்ட் பார்க்கிங் அமைக்கப்படும். முதல்வரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.2,117 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. குறைந்த குடும்ப வருமானம் மற்றும் இளைஞர்களுக்கு தரமான வீடுகள் கட்டி தரப்படும்.

சென்னையில் குடியிருப்பு பகுதிகள், சாலைகள், பொது இடங்கள் பசுமையாக்கப்படும். சென்னையில் 5 ஆண்டுகளில் சமமான மற்றும் தடையற்ற குடிநீர் விநியோகம் உறுதி செய்யப்படும். மேலும் கூவம், அடையாறு ஆறுகளை தூய்மைப்படுத்தி மேம்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் ஆய்வு செய்யப்படும். தொடர்ந்து இந்த 2 ஆறுகளிலும் படகு சவாரி, நதிக்கரை நடைபாதை மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என்றார் நிதி அமைச்சர். மேலும் திட்டங்களுக்கு AI மூலம் விரைவாக அனுமதி தர ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகளில் EV சார்ஜிங் நிலையங்கள் அமைக்க மானியம் வழங்கப்படும், இதற்கு ரூ.5 கோடி ஒதுக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் EV சார்ஜிங் நிலையங்கள் அமைக்க ரூ.50 கோடி ஒதுக்கப்ட்டுள்ளது.