ஆற்றல் துறையில் புரட்சி..! ரூ.14,500 கோடி நிதி உதவியுடன் 92 GWh மின்சேமிப்புத் திட்டத்திற்கு ஒப்புதல்
டெல்லி:92 ஜிகாவாட்-ஹவர் (GWh) திறன் கொண்ட மின்சேமிப்புத் திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்ளாளிடம் பேசிய அவர், தற்போது மொத்தமாக 92 ஜிகாவாட்-ஹவர் (GWh) திறன் கொண்ட ஆற்றல் சேமிப்புத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 30 GWh மின்கல சேமிப்பிற்கும், 60 GWh நீரேற்று நீர்மின் சேமிப்பிற்கும் ஒதுக்கப்படும் என்றார்.
இத்திட்டத்திற்கு ரூ.14,500 கோடி வரைவு நிதி உதவி வழங்கப்படவுள்ளது. மாநில அரசுகளுடன் இணைந்து இந்தத் திட்டத்தை நாங்கள் செயல்படுத்துவோம், இது நாடு முழுவதும் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வோம்.. மேலும் இன்று மற்றொரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டது: முக்கிய கனிமங்களைப் பதப்படுத்துவதற்கான ஒரு திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சுரங்கம் அல்லது மறுசுழற்சி மூலம் பெறப்பட்ட மூல முக்கிய கனிமங்களை, முறையான உற்பத்தி செயல்முறைகளுக்குத் தயாராக இருக்கும் வகையில் பதப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்தத் திட்டம், சுரங்கங்களிலிருந்து பெறப்படுபவை மற்றும் மறுசுழற்சி மூலம் மீட்கப்படுபவை என அடையாளம் காணப்பட்ட 24 முக்கிய கனிமங்களுக்கும் பொருந்தும். மின்னணுவியல், குறைக்கடத்திகள், மின்கலங்கள், பாதுகாப்பு, கனரக உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் என இவை அனைத்தும் முக்கிய கனிமங்களைச் சார்ந்துள்ளன. எனவே இந்த திட்டம் நாட்டின் உற்பத்தித் துறையில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.


