Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

தேர்தலில் வெற்றி பெற்றால் எலான் மஸ்க்கிற்கு அமைச்சர் பதவி: டொனால்டு டிரம்ப் அறிவிப்பால் பரபரப்பு!!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் எலான் மஸ்குக்கு அமைச்சர் பதவி கொடுப்பேன் என டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், அவருக்கு எதிராக ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸை களமிறக்க உள்ளார். இருவரும் மாகாணங்கள் முழுவதும் பயணித்து தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்றுக்கு டிரம்ப் அளித்த பேட்டியில், எலான் மஸ்குக்கு ஆலோசனைப் பாத்திரத்திற்காக அல்லது அமைச்சரவைப் பணிக்காக தேர்தெடுக்கப்படுவாரா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த டிரம்ப், தான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், எலான் மஸ்க் மந்திரிசபையில் ஒரு பதவியையோ அல்லது வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவியையோ ஏற்றுக்கொள்ள வலியுறுத்துவேன் என்று தெரிவித்துள்ளார். இது அமெரிக்க அரசியல் களத்தில் டிரம்ப் அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக மஸ்க் ஒரு பதிவை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். அதில், DOGE - அரசின் செயல்திறன் துறை (Department of Government Efficiency) துறையில் தான் பணியாற்ற தயாராக இருப்பதாக பதிவிட்டுள்ளார். மேலும், 2008 மற்றும் 2012 காலகட்டம்வரை பராக் ஒபாமாவுக்கு, 2016 இல் ஹிலாரி கிளிண்டனுக்கும், 2020ல் ஜோ பைடனுக்கும், தற்போது 2024ல் டிரம்புக்கும் ஆதரவான நிலைப்பாட்டை எலான் மஸ்க் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.