Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திடீர் நிலநடுக்கம்.. பாகிஸ்தானில் சிறையில் இருந்த 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்..!!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது 200க்கும் மேற்பட்ட சிறைக்கைதிகள் தப்பி ஓடியுள்ளனர். பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில், 16 முறை சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் கட்டங்கள் குலுங்கியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிந்து மாகாணத்தின் தலைநகரான கராச்சியை அடுத்துள்ள மாலிர் மாவட்ட சிறைச்சாலையில் இருந்த 600 கைதிகள் சிறை அறைக்குள் இருந்து வெளியே அழைத்து வரப்பட்டு, பிரதான வாயில் அருகே ஒன்று குவிக்கப்பட்டனர்.

இதனை பயன்படுத்திக்கொண்ட கைதிகள் 200க்கும் மேற்பட்டோர் சிறையில் இருந்து தப்பிச்சென்றுள்ளனர். இது தொடர்பாக சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்; சம்பவம் நடந்த நேரத்தில் மாலிர் சிறையில் 6,000 க்கும் மேற்பட்ட கைதிகள் இருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் ஈடுபட்டவர்கள். நிலநடுக்கத்தின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 600க்கும் மேற்பட்ட கைதிகள் தங்கள் முகாம்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்த சிறைக்கைதிகள் சிலர், சிறைகாவலர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த மோதலில், காவலர் நடத்திய துப்பாக்கிசூட்டில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். 4 காவலர்கள் காயமடைந்துள்ளனர். இதில், 200க்கும் மேற்பட்டோர் தப்பிச்சென்றுள்ளனர். அதில், 80 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள 130க்கும் மேற்பட்டோர் தீவிரமாக தேடப்பட்டு வருகின்றனர்.