Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திமுகவில் பல்வேறு அணிகளின் தலைமை கழக நிர்வாகிகள் நியமனம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திமுகவில் பல்ேவறு அணிகளின் தலைமை கழகம் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக தலைமை கழகம் நிர்வாகிகளை பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக சிறுபான்மை நலஉரிமைப் பிரிவு தலைவராக டி.பி.எம்.மைதீன்கானும்; சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் வி.ஜோசப்ராஜ், சிறுபான்மை நலஉரிமைப் பிரிவு துணைத் தலைவராகவும்; சிறுபான்மை நலஉரிமைப் பிரிவு துணைச் செயலாளராக கே.அன்வர் அலியும் நியமிக்கப்படுகிறார்கள்.

திமுக வர்த்தகர் அணி துணைச் செயலாளர் வேப்பூர் வி.எஸ்.பெரியசாமி மறைவெய்தியகாரணத்தால், குன்னம் ராஜேந்திரன்(பெரம்பலூர்) மற்றும் கே.வி.எஸ்.சீனிவாசன்(கிருஷ்ணகிரி) திமுக வர்த்தகர் அணி துணைச் செயலாளர்களாக நியமிக்கப்படுகின்றனர். திமுக செய்தித் தொடர்பு துணைச் செயலாளராக நியமிக்கப்பட்ட கோவை செல்வராஜ் மறைவெய்திய காரணத்தால், சூர்யா கிருஷ்ணமூர்த்தி(சென்னை), தி.மு.க. செய்தித் தொடர்பு துணைச் செயலாளராகவும் நியமிக்கப்படுகிறார்.

திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளராக ஏற்கனவே நியமிக்கப்பட்ட தமிழ்பொன்னிக்கு பதிலாக, திவ்யா சத்தியராஜ் திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளராகவும் மற்றும் பி.எம்.தர்(செம்பனார்கோவில், மயிலாடுதுறை மாவட்டம்) மற்றும் பா.ச.பிரபு(மதுரை) ஆகியோர் திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக கொள்கைப் பரப்பு துணைச் செயலாளராக நியமிக்கப்பட்ட பி.ஆர்.சுந்தரம் மறைவெய்திய காரணத்தால், முனைவர் வே.தமிழ்பிரியா(சிவகங்கை மாவட்டம்), தி.மு.க. கொள்கைப் பரப்பு துணைச் செயலாளராகவும்; தி.மு.க. ஆதிதிராவிடர் நலக்குழு தலைவர் க.சுந்தரம் மறைவெய்திய காரணத்தால், ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் மருதூர் ஏ.இராமலிங்கம் தி.மு.க. ஆதிதிராவிடர் நலக்குழு தலைவராகவும்; கொ.ரமேஷ் (தர்மபுரி) தி.மு.க. ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளராகவும் நியமிக்கப்படுகின்றனர்.

திமுக இலக்கிய அணி துணைச் செயலாளர் ஆர்எம்டி.ரவீந்திரன் மறைவெய்திய காரணத்தால், சௌமியன் வைத்தியநாதன்(மயிலாடுதுறை), ஜி.நாகநாதன்(ராமநாதபுரம் மாவட்டம்) மற்றும் வி.டி.கலைச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ., (விருத்தாசலம்) ஆகியோர் தி.மு.க. இலக்கிய அணி துணைச் செயலாளர்களாகவும்; திமுக கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை துணைச் செயலாளராக எம்.எஸ்.ஹரிபாபு(சென்னை) நியமிக்கப்படுகின்றனர்.

திமுக மாணவர் அணி துணைச் செயலாளராக ஏற்கனவே நியமிக்கப்பட்ட திண்டுக்கல் க.பொன்ராஜ் ஒன்றியக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட காரணத்தால், அவருக்குப் பதிலாக ஜெ.இராமகிருஷ்ணன்(சிவகங்கை) திமுக மாணவர் அணி துணைச் செயலாளராகவும்; திமுக தொண்டர் அணி துணைச் செயலாளராக ஏற்கனவே நியமிக்கப்பட்ட திருச்சி முத்துக்குமரன் சரிவர கட்சி பணியாற்றாத காரணத்தால் அவரை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக, எஸ்.எம்.கே.அண்ணாதுரை(நுங்கம்பாக்கம், சென்னை), திமுக தொண்டர் அணி துணைச் செயலாளராகவும் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார்கள். ஏற்கனவே நியமிக்கப்பட்டவர்களுடன் இவர்கள் இணைந்து பணியாற்றுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.