Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திமுக ஆட்சியை குறை சொல்ல ஏதுமில்லாததால் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி

சென்னை: திமுக ஆட்சியை குறை சொல்ல ஏதுமில்லாததால் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடிபழனிசாமி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் கொடுத்துள்ளார். கொளத்தூரில் இன்று நடைபெற்ற பல்வேறு விழாக்களில் பங்கேற்றுவிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

கேள்வி : தமிழக அரசு மீது எதிர்க்கட்சி தலைவர் தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வருகிறாரே?

பதில் : இந்த ஆட்சி பற்றி குறை சொல்வதற்கு எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. எனது டெல்லி பயணம் குறித்து திரும்ப திரும்ப அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி. அவருக்கு பதில் கூறி என் தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை.

கேள்வி : டெல்லி பயணம் குறித்து விமர்சனம் வைத்துள்ளாரே எடப்பாடி?

பதில் :வெள்ளைக்கொடி எடுத்துக் கொண்டு செல்வதாக எடப்பாடி கூறினார். வெள்ளைக்கொடி எடுத்துக் கொண்டும் நான் போகவில்லை, காவி கொடியுடனும் போகவில்லை என்று தெளிவாக நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன்.

கேள்வி : மக்கள் அவர்களே தங்களை காத்துக்கொள்ள வேண்டும் என்று இன்றுகூட எடப்பாடி கூறி உள்ளாரே?

பதில் : அதிமுக ஆட்சியில் இருந்தபோது கொள்ளையடித்த ஆட்சி, ஏற்கனவே சாத்தான்குளம், தூத்துக்குடி இப்படி பல சம்பவங்கள் இருக்கிறது. அதெல்லாம் எடுத்துச் சொல்ல நேரம் போதாது. இதெல்லாம் வீம்புக்காக பண்ணிக் கொண்டிருக்கிறார். அதற்கு சில மீடியாக்கள் இரையாகி, அந்த செய்திகளை திரும்ப திரும்ப போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.