Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கன்னியாகுமரியில் கரை ஒதுங்கியதா ரசாயன பொருட்களா?.. ஆட்சியர் நேரில் ஆய்வு

கன்னியாகுமரி: குமரி கடலோரங்களில் ரசாயன பொருட்கள் கரை ஒதுங்கியதாக வந்த தகவலை அடுத்து ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகில் உள்ள விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து கொச்சிக்கு கடலில் சரக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த கப்பலில் உள்ள கன்டெய்னர்களில் ரசாயனம் இருந்தன. இதற்கிடையே தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் அரபிக்கடலில் நேற்று பலத்த காற்று வீசியது. கொச்சி அருகே நடுக்கடலில் சரக்கு கப்பல் சென்றபோது திடீரென்று கவிழ்ந்தது. நல்லவேளையாக மூழ்காமல் சாய்ந்த நிலையில் நின்றது.

மேலும் சரக்கு கப்பலில் ரசாயனம் இருந்த கன்டெய்னர்கள் கடலுக்குள் விழுந்தது. இந்த கப்பலில் மாலுமிகள் உள்பட 24 பேர் இருந்தனர். இவர்களில் 9 பேர் உடனடியாக உயிர்காக்கும் ஜாக்கெட்டுகளை பயன்படுத்தி கடலுக்குள் குதித்து நீந்திச்சென்று தப்பித்தனர். ஹெலிகாப்டர் மூலமும், மாற்று கப்பல் மூலமும் 12 பேர் மீட்கப்பட்டனர். மேலும் 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். கடலில் ரசாயனம் கொட்டியதால் அப்பகுதி ஆபத்தான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடலோர பகுதி மக்களுக்கும், மீனவர்களுக்கும் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கண்டெய்னர்களில் இருந்த ரசாயன பொருட்கள் வெளியேறி வரும் நிலையில் குமரியில் கரை ஒதுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. குமரி கடலோரங்களில் எண்ணெய் படர்ந்த நிலையில் கடல்நீர் உள்ளதாக வந்த தகவலை அடுத்து ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார். கரை ஒதுங்கியது ரசாயன பொருட்களா என மாவட்ட ஆட்சியர் அழகு மீனா உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.