Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

ராமசாமி படையாட்சியாரின் 107ஆவது பிறந்தநாளை ஒட்டி அவரது திருவுருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ராமசாமி படையாட்சியாரின் 107 ஆவது பிறந்தநாளை ஒட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது திருவுருவப் படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோரும் ராமசாமி படையாட்சியாரின் திருவுருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினர்.

சிவ சிதம்பர ராமசாமி படையாட்சி (எஸ். எஸ். ராமசாமி படையாட்சி; 16 செப்டம்பர் 1918 – 3 ஏப்ரல் 1992) ஒரு தமிழக அரசியல்வாதியும், இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும் ஆவார். தமிழக அமைச்சரவையில் உறுப்பினராகவும் இந்திய மக்களவை உறுப்பினராகவும் இருந்தவர்.

1951 இல் வன்னிய சங்கம் ஒரு சாதி மாநாட்டைக் கூட்டி வன்னியருக்காக ஒரு மாநிலந்தழுவிய கட்சியினை உருவாக்க முயன்றது. ஆனால் தலைவர்களுக்குள் இருந்த வேறுபாடால் இம்முயற்சி வெற்றி பெறவில்லை. மாறாக வட ஆற்காடு மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் செல்வாக்கு பெற்றிருந்த எம். ஏ. மாணிக்கவேலு நாயக்கர் காமன்வீல் கட்சியினைத் தொடங்கினார்.

தென்னாற்காடு மற்றும் சேலம் மாவட்ட வன்னியர்கள் ராமசாமி படையாச்சியின் தலைமையில் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி என்ற மற்றொரு கட்சியைத் தொடங்கினர். இரு கட்சிகளும் 1952 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) ஆதரவுடன் போட்டியிட்டன. இத்தேர்தலில் திமுக நேரடியாகப் போட்டியிடவில்லை.

மாறாக திராவிட நாடு கோரிக்கையைப் பற்றி சட்டமன்றத்தில் பேசுவோம் என்று உறுதியளித்து ஒப்பந்ததில் கையெழுத்திட்ட கட்சிகளுக்கும் சுயேட்சை வேட்பாளர்களுக்கும் ஆதரவளித்தது. அவ்வாறு உறுதியளித்து போட்டியிட்ட கட்சிகளுள் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியும் ஒன்று.

நாட்டு விடுதலைக்காகவும் சமூக உரிமைகளுக்காகவும் பாடுபட்ட எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாள் இன்று கொண்டப்படுகிறது. பேரறிஞர் அண்ணாவோடும் முத்தமிழறிஞர் கலைஞரோடும் நெருங்கிப் பழகியவர் அவர். அவரது வாழ்வைப் போற்றி கிண்டி, ஹால்டா சந்திப்பில் தலைவர் கலைஞர் அமைத்த சிலைக்கு மலர் வணக்கம் செலுத்தினார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைக் குரல் எழுப்பிய எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சியாரின் பணிகளை நினைவுகூர்ந்து போற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எகஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.