Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 குறைந்து ரூ. 73,240க்கு விற்பனை!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 குறைந்து ரூ.73,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த 14ம் தேதி ஒரு பவுன் ரூ.74,560க்கு விற்பனையாகி வரலாற்றில் புதிய உச்சம் தொட்டது. அதன் பிறகு தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 21ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,235க்கும், பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு பவுன் ரூ.73,880க்கும் விற்பனையானது. 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். இதனால், தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.

ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலை பெயரளவுக்கு குறைந்திருந்தது. அதாவது, கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.9,230க்கும், பவுனுக்கு ரூ.40 குறைந்து ஒரு பவுன் ரூ.73,840க்கும் விற்பனையானது. அதே நேரத்தில் நேற்று வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.120க்கும், பார் வெள்ளி 1 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.

இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 குறைந்து ரூ.73,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.75 குறைந்து ரூ.9,155க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.120க்கு விற்பனையாகிறது.